×

சென்னை விமான நிலைய வருகை பகுதி வாயில் அருகே ஆதார், பான் அட்டைகள் கொட்டிக்கிடந்ததால் பரபரப்பு..!!

 

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ஆதார் மற்றும் பான் அட்டைகள் குப்பையாக கொட்டிக்கிடந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னை சர்வதேச விமானநிலைய வருகை பகுதியில் A6 எனப்படும் பகுதியில் குப்பைகள் கொட்டப்படும் இடத்தில் ஆதார்கார்டுகள் மற்றும் பான் கார்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விமானநிலையத்தில் பயணிகள் டிக்கெட்டுடன் ஒரு அடையாள அட்டை கொண்டு சென்று மத்திய தொழில் பாதுகாப்பு படையினரிடம் காட்டி விட்டு பயணம் செய்வது வழக்கம். இந்நிலையில் ஆதார் அட்டைகள், பான் கார்டுகள் பயணிகள் கொண்டு செல்வர். பயணிகள் அவசரநிலையில் ஆதார் அட்டை மற்றும் பான் கார்டுகள் தவரவிடுவதை விமானத்துறை அதிகாரிகள் முறையான முறையில் ஒப்படைப்பதில்லை.

இதுபோல் தவரவிடும் ஆதார் அட்டை, பான் கார்டுகளை தபால் துறை மூலமாக அவர்கள் போஸ்ட் செய்தால் போதும் அது உரியவரிடம் சென்று அதற்கான தொகையை அவர்களிடமே பெறுவது இந்திய தபால் துறை சட்டத்தில் உள்ளது. ஆனால் விமான நிலையத்தை சேர்ந்த தொழில் பாதுகாப்பு துறை அதிகாரிகள், விமான நிலைய அதிகாரிகள் இதுபோல் பயணிகள் தவறவிட்ட ஆதார் கார்டுகள், பான் கார்டுகளை திருப்பி அவர்களுக்கு அனுப்பாமல் அங்கேயே குப்பையை போல கொட்டி வைத்துள்ளனர்.இதனை கண்ட அந்த பகுதியில் உள்ள பயணிகள் ஆதார் அட்டை, பான் கார்டுகளை எடுக்க சென்ற போது தொழில் பாதுகாப்பு துறை அதிகாரிகள் அவர்களை தடுத்து எடுக்கக்கூடாது என்று தெரிவித்தனர்.

இதனால் பயணிகள் அங்குள்ள அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் இது குறித்து விமானத்துறை அதிகாரியிடம் கேட்ட போது நாங்கள் முறையாக அனுப்புவது வழக்கம் ஆனால் சமீப காலமாக அனுப்பவில்லை எனவும் தெரிவித்தனர். மீண்டும் இந்த நிகழ்வு வராமல் பார்த்து கொள்கிறோம் என்றும் தெரிவித்தனர். பான் மற்றும் ஆதார் கார்டுகளை வைத்து புதிய சிம்க்கார்டுகளை பெற முடியும். இது தவறான நபருக்கு கிடைத்தால் பல்வேறு குளறுபடி, குற்ற செயல்களில் ஈடுபடுவதற்கு ஏதுவாக அமைந்திருக்கும். இதுபோல் இந்த முறை தான் வீசப்பட்டதா? இதற்கு முன்பு வீசப்பட்டுள்ளதா என போலீசாரும், விமானத்துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post சென்னை விமான நிலைய வருகை பகுதி வாயில் அருகே ஆதார், பான் அட்டைகள் கொட்டிக்கிடந்ததால் பரபரப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Aadhaar ,Chennai airport ,Chennai ,
× RELATED மழைநீர் தேங்கியதால் மூடப்பட்ட சென்னை...