×

மார்வெலை இயக்கும் இளம் பெண்!

மார்வெல் ஸ்டூடியோ காமிக்ஸ் மற்றும் சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்புகளுக்கு உள்ளாகி இருக்கும் திரைப்படங்களில் ஒன்றான ‘தி மார்வெல்ஸ்’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் முதல் முறையாக கேப்டன் மார்வெல், மிஸ் மார்வெல் மற்றும் கேப்டன் மோனிகா ரேம்போ என மூன்று பெண் சூப்பர் ஹீரோயின்களை ஒன்றிணைத்துள்ளது மார்வெல்நிறுவனம். கடந்த வருடம் ஓடிடி தளத்தில் வெளியான ‘மிஸ் மார்வெல்’தொடரின் கடைசிஎபிசோடில் மிஸ் மார்வெல் கமலா கான், கேப்டன் மார்வெல் கரோல் டென்வர்ஸ் ஆக மாறுவதாக முடிந்திருந்தது. இதற்கடுத்து என்ன என்பதற்கான பதிலாக இந்தப் படம் வெளியாகிறது. இந்த மூவருடைய சூப்பர் சக்திகளின் மூலம்முவரும் ஒருவருக்கு ஒருவர் தங்களை இடமாற்றிக் கொள்கிறார்கள். இதில் நிக் ஃப்யூரி (சாமுவேல் ஜாக்சன்), ஏலியன் பூனை உள்ளிட்ட மார்வெல் ரசிகர்களுக்குப் பிடித்த பாத்திரங்களும் இதில் உள்ளன. பிக்-டிக்கெட் என்டர்டெயினரில் ப்ரி லார்சன், டெயோனா பாரிஸ், இமான் வெல்லானி, சாமுவேல் எல். ஜாக்சன், ஜாவே ஆஷ்டன் மற்றும் பார்க் சியோ-ஜூன் ஆகியோர் நடித்துள்ளனர். நியா டகோஸ்டா இயக்குகிறார், கெவின் ஃபைஜ் தயாரிப்பாளர்.

மார்வெல் ஸ்டுடியோவின் ‘தி மார்வெல்ஸ்’ இந்த தீபாவளிக்கு ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது. இயக்குநர் நியா டகோஸ்டாதான் மார்வெல் சினிமாட்டிக் உலகில் இளம் பெண் இயக்குநர் மற்றும் முதல் கருப்பினப் பெண்ணும் இவர்தான். 33 வயதான நியா டகோஸ்டா ‘லிட்டில் வுட்ஸ்’ என்னும் கிரைம் டிராமா படத்தையும், ‘கேண்டி மேன்’ என்னும் ஹாரர் படத்தையும் இதற்கு முன்பு இயக்கியிருக்கிறார். 16 வயதிலேயே சினிமாவின் பால் ஈர்க்கப்பட்டு அதையே மேற்படிப்பாக எடுத்து படிக்கும் அளவிற்கு அவரை மாற்றியது. எங்கும் எதிலும் மார்வெலின் இளம் இயக்குநர் என நியா டகோஸ்டாதான் பிரபலமாகிக் கொண்டிருக்கிறார்.
– கவின்

The post மார்வெலை இயக்கும் இளம் பெண்! appeared first on Dinakaran.

Tags : Marvel ,Marvel Studio ,Marvel! ,Dinakaran ,
× RELATED மேடம் வெப் – திரைவிமர்சனம்