×

குமாரபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சாய கழிவு ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை..!!

நாமக்கல்: குமாரபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சாய கழிவு ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பள்ளிபாளையம் பகுதிகளில் கடந்த சில நாட்களாக சாயக்கழிவு தொழிற்சாலை செயல்பட்டு வருகின்றன. இத்தகைய சாயத்தொழிற்சாலைகள் அனுமதி பெற்று இயங்கி வருவதால் பல்வேறு விதமான பிரச்சனைகள் அதிகரித்து வருகிறது.

அனுமதி பெற்ற தொழிற்சாலைகள் நள்ளிரவு நேரங்களில் சாய கழிவுகளை சுத்திகரிக்காமல் கால்வாய்கள் மூலம் வெளியேற்றுகின்றனர். இதனை கண்ட மாவட்ட மாசு கட்டுப்பாடு அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்ட போதிலும், பகல் நேரங்களில் சாயக்கழிவுகளை சுத்திகரித்து வெளியனுப்புகிறோம் என்பது போல் கணக்குகளை காட்டிக்கொண்டு அதிகாரிகளை அனுப்பிவைத்து விடுகின்றனர்.

ஆனால் தொடர்ந்து இரவு நேரங்களில் கழிவுகளை வெளியேற்றி வருகின்றனர். கடந்த 2 நாட்களாக இரவு நேரங்களில் குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றிரவு ஒரு மணி நேரத்துக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு நேற்றிரவு பெய்த கனமழையை பயன்படுத்தி சுத்திகரிப்பு செய்யாத சாயக்கழிவு நீரை கால்வாய் வழியாக வெளியேற்றி வருகின்றனர்.

அவ்வாறு திறந்து விடும் நீர் கால்வாய் வழியாக காவிரி ஆற்றை சென்றடைகிறது. கழிவானது காவிரி ஆற்றில் கலப்பதால் தொடர்ந்து காவிரி நீர் மாசடைந்து வருவதாகவும் இப்பகுதியில் நோய்ப்பதிப்பு அதிகரிப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் இரவு நேரங்களில் தொடர்ந்து சாயக்கழிவுகளை வெளியேற்றும் தொழிற்சாலைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அப்பகுதிமக்கள் தெரிவிக்கின்றனர்.

The post குமாரபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சாய கழிவு ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை..!! appeared first on Dinakaran.

Tags : Kumarapalayam ,NAMACKAL ,Dinakaran ,
× RELATED மது விற்ற 5 பேர் கைது