×

ஒன்றிய அமைச்சர் கவுஷல் கிஷோர் வீட்டில் தூப்பாக்கிச்சூடு: தலையில் காயங்களுடன் அமைச்சரது மகனின் நண்பர் மரணம்

லக்னோ: ஒன்றிய அமைச்சர் கவுஷல் கிஷோரின் லக்னோ வீட்டில் அதிகாலையில் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் ஒன்றிய அமைச்சர் கவுஷல் கிஷோரின் வீடு ஒன்று உள்ளது. இங்கு இளைஞர் ஒருவர் துப்பாக்கி குண்டு பட்டு தலையில் காயங்களுடன் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி நிகழ்விடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில் அமைச்சரின் மகனான விகாஸ் கிஷோரும், உயிரிழந்த வினய் ஸ்ரீவத்சவா நண்பர்கள் என தெரிய வந்துள்ளது. அதுமட்டுமின்றி சம்பவ நடந்த இடத்திலிருந்து விகாஸ் கிஷோரின் துப்பாக்கியும் சிக்கியிருப்பதால் சந்தேகம் வலுத்துள்ளது. மேலும், இரவு 6 பேர் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிட்டதும் அதற்கு பின்னரே இந்த கொலை நடந்திருப்பதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

இதனிடையே சம்பவம் நடந்த போது தனது மகன் அங்கு இல்லை என்றும் டெல்லியில் இருந்ததாகவும் அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். இதற்கிடையே உயிரிழந்த வினய் ஸ்ரீவத்சவா மரணம் குறித்து விசாரணை நடத்தும்படி அவரது சகோதரர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பின் தற்போது வழக்கு பதிவு செய்து விகாஸ் நண்பர்கள் மூவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரிக்கின்றனர்.

The post ஒன்றிய அமைச்சர் கவுஷல் கிஷோர் வீட்டில் தூப்பாக்கிச்சூடு: தலையில் காயங்களுடன் அமைச்சரது மகனின் நண்பர் மரணம் appeared first on Dinakaran.

Tags : Union Minister ,Kaushal Kishor ,Lucknow ,Goushal Kishor ,Kaushal Kishore ,Dinakaran ,
× RELATED தேர்தல் தோல்விக்கு மின்னணு...