×

தமிழ்நாடு காவல்துறையில் 3359 கான்ஸ்டபிள்கள்

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்

தமிழ்நாடு காவல்துறையில் காலியாக உள்ள 3359 கான்ஸ்டபிள்கள் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: இரண்டாம் நிலை காவலர் (கான்ஸ்டபிள்)

மொத்த பணியிடங்கள்: 3359.

i) காவல்துறை:

அ. இரண்டாம் நிலை காவலர் (ஆண்கள்) (தமிழ்நாடு சிறப்பு காவல் படை): 1,819.
ஆ. இரண்டாம் நிலை காவலர் (பெண்கள்) (மாவட்டம்/மாநகர ஆயுதப்படை): 780 இடங்கள்.

ii) சிறை மற்றும் சீர்திருத்தத்துறை

அ. இரண்டாம் நிலை சிறைக் காவலர் (ஆண்கள்): 83 இடங்கள்
ஆ. இரண்டாம் நிலை சிறைக் காவலர் (பெண்கள்): 3 இடங்கள்.

iii) தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை:

அ. தீயணைப்பாளர் (ஆண்கள்) – 674 இடங்கள்.

தகுதி: குறைந்த பட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 1.7.2023 தேதியின்படி பொதுப் பிரிவினர் 18 வயதிலிருந்து 26 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும். பிற்பட்டோர்/முஸ்லிம்/ மிகவும் பிற்பட்டோருக்கு 2 வருடங்களும், எஸ்சி/ அருந்ததியர்/ எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். மூன்றாம் பாலினத்தவர்கள் 31 வயது வரையிலும், ஆதரவற்ற விதவைகள் 37 வயது வரையிலும், முன்னாள் ராணுவத்தினர் 47 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ.18,200-67,100.

எழுத்துத்தேர்வு, உடற்தகுதி தேர்வு, உடல் திறன் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத்தேர்வு 2 பிரிவுகளைக் கொண்டது. பிரிவு-1ல் தமிழ் மொழி தகுதித் தேர்வு நடத்தப்படும். பிரிவு-2ல் பொது அறிவு கேள்விகளைக் கொண்ட முதன்மை தேர்வு 70 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். தமிழ் மொழி தகுதித் தேர்வு 80 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். தமிழ்மொழி தகுதித் தேர்வில் குறைந்த பட்சம் 32 மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே முதன்மை தேர்வு விடைத்தாள் திருத்தப்படும்.

உடற்தகுதித் தேர்வில் விண்ணப்பதாரர் உயரம், ஆண்களுக்கு மட்டும் மார்பளவு ஆகியவை பரிசோதிக்கப்படும். உடற்தகுதி தேர்வில் விண்ணப்பதாரர் ஓடுதல், கயிறு ஏறுதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் ஆகிய போட்டிகளில் விண்ணப்பதாரர் வெற்றி பெற வேண்டும். இறுதியில் மருத்துவ பரிசோதனை நடத்தப்படும்.

கட்டணம்: ரூ.250/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டம், மாதிரி வினாத்தாள், உடற்தகுதித் தேர்வு, உடற்திறன் தேர்வு ஆகியவை குறித்து இணையதளத்தில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

www.tnusrb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 17.9.2023.

The post தமிழ்நாடு காவல்துறையில் 3359 கான்ஸ்டபிள்கள் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...