×

2014-லேயே அதானி குழுமத்தின் முறைகேடுகள் குறித்து செபிக்கு வருவாய்த்துறை கடிதம்: வெளிச்சத்திற்கு கொண்டுவந்த பிரசாந்த் பூஷண்

டெல்லி: அதானி குழும நிறுவனங்கள் பலவித முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் குற்றச்சாட்டியுள்ளார். அதானி குழும முறைகேட்டை விசாரிக்க கோரி செபிக்கு ஒன்றிய வருவாய் புலனாய்வுத்துறை 2014-ல் எழுதிய கடிதம் அனுப்பியுள்ளது. செபிக்கு ஒன்றிய வருவாய் புலனாய்வுத்துறை இயக்குனர் 2014, ஜனவரி 1-ல் எழுதிய கடிதத்தை பிரசாந்த் பூஷண் வெளியிட்டார்.

ரூ.6,278 கோடிக்கு அதானி குழும மோசடி: வருவாய்துறை
மின்னுற்பத்தி ஆலைக்குத் தேவையான சாதனங்களை இறக்குமதி செய்ததில் அதானி குழும முறைகேடு செய்ததாக புகார் எழுந்துள்ளது. மின்னுற்பத்தி ஆலைகளை தளவாடங்களின் உண்மை விலையை விட அதிக தொகைக்கு பில் தயாரித்து அதானி குழுமம் மோசடி செய்துள்ளது. அதிகத் தொகைக்கு பில் தயாரித்து அதானி குழுமத்தின் பல நிறுவனங்கள் ஆலைக்கான சாதனங்களை இறக்குமதி செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உண்மை விலையை விட அதிகத் தொகைக்கு பில் தயாரித்ததன் மூலம் ரூ.6,278 கோடி சட்டவிரோத பணப்பரிமாற்றம் என புகார் எழுந்துள்ளது.

துபாயைச் சேர்ந்த நிறுவனம் மூலமாக கூடுதல் பில் தொகைக்கு ஆலைக்கான சாதனங்களை இறக்குமதி செய்து மோசடி செய்துள்ளது. முறைகேடாக அனுப்பப்பட்ட ரூ.6278 கோடியில் ஒரு பகுதி மொரீசியஸ் நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை புகார் அளித்துள்ளது. முறைகேடாக மொரீசியஸூக்கு சென்ற அதானியின் பணம், அங்கிருந்து இந்திய பங்குச்சந்தைகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. மொரீசியஸ் முதலீட்டால் அதானி குழும நிறுவன பங்குகள் விலை அதிகரித்தவுடன் அவற்றை விற்று லாபம் பார்த்துள்ளனர். அதானி குழுமத்தின் முறைகேடுகள் குறித்து விசாரிக்க கோரியே 2014-ல் செபிக்கு வருவாய்த்துறை கடிதம் அனுப்பி இருந்தது.

The post 2014-லேயே அதானி குழுமத்தின் முறைகேடுகள் குறித்து செபிக்கு வருவாய்த்துறை கடிதம்: வெளிச்சத்திற்கு கொண்டுவந்த பிரசாந்த் பூஷண் appeared first on Dinakaran.

Tags : Revenue ,SEBI ,Adani Group ,Prashant Bhushan ,Delhi ,Revenue Department ,Dinakaran ,
× RELATED அதானி நிறுவன மோசடி குறித்த செபி...