×

விசாகா ஸ்டீல் பிளாண்டில் இரும்பு திரவம் கொட்டி விபத்து: லேடில் முனை உடைந்து கொட்டிய கொதிக்கும் இரும்பு திரவம்

அமராவதி: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஸ்டீல் பிளாண்டில் இரும்பு திரவம் கொட்டி விபத்து ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் விசாகா ஸ்டீல் பிளாண்ட் தொழிற்சாலை உள்ளது. ஒன்றிய அரசுக்கு சொந்தமான இந்த தொழிற்சாலையில் நேற்று இரவு வழக்கம்போல பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், அந்த தொழிற்சாலையில் உள்ள ஒரு பிரிவில் இரும்புகளை உருக்கி திரவமாக மாற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுப்பட்டனர்.

அப்போது திடீரென லேடில் அறுந்து விழுந்தது. அப்போது லேடில் முனை உடைந்து அதில் இருந்த இரும்பு திரவம் அனைத்தும் தரையில் கொட்டியதால் விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீ பரவாமல் இருக்க ரசாயன கலந்த தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இருப்பு திரவியம் கொட்டிய நேரத்தில் அதிர்ஷ்டவசமாக அந்த பகுதியில் தொழிலாளர்கள் யாரும் இல்லாததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. மேலும், இந்த விபத்து காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஸ்டீல் பிளாண்ட் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

 

The post விசாகா ஸ்டீல் பிளாண்டில் இரும்பு திரவம் கொட்டி விபத்து: லேடில் முனை உடைந்து கொட்டிய கொதிக்கும் இரும்பு திரவம் appeared first on Dinakaran.

Tags : Visakha steel ,Amaravati ,Andhra Pradesh ,Visakhapatnam ,Visakha ,Visakhapatnam, Andhra Pradesh ,
× RELATED மிக்ஜாம் புயல் 3 மணி நேரத்தில் கரையை கடக்கிறது