×

மெரினாவில் இந்தியாவின் முதல் கடற்கரை மெட்ரோ: நான்காவது வழித்தடத்தில் சுரங்கம் தோண்டும் பணிகள் இன்று தொடக்கம்..!!

சென்னை: இந்தியாவின் முதல் கடற்கரை மெட்ரோ நிலையம் அமையவுள்ள சென்னை மெரினா கலங்கரை விளக்கம் பகுதியில் சுரங்கம் தோண்டும் பணிகள் இன்று தொடங்க உள்ளன. சென்னை மெட்ரோவின் இரண்டாம் கட்ட பணிகள் 3 வழித்தடங்களில் 116 கிலோமீட்டர் தொலைவுக்கு நடைபெற்று வருகிறது.

இதில் 3வது வழித்தடத்தில் உள்ள மாதவரம் பால்பண்ணை பசுமைவழிசாலை உள்ளிட்ட இடங்களில் மொத்தம் 8 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் மூலம் சுரங்கம் தோண்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 4வது வழித்தடத்தில் முதல் முறையாக சென்னை மெரினாவில் சுரங்கம் தோண்டும் பணி இன்று தொடங்கவுள்ளது.

இதற்காக ஃபிளமிங்கோ என பெயர் வைக்கப்பட்ட இயந்திரம் கடந்த ஒரு மாதமாக சோதனை செய்யப்பட்டு இன்று முதல் தனது பணியை தொடங்குகிறது. கலங்கரைவிளக்கம் தொடங்கும் சுரங்கம் தோண்டும் பணி கச்சேரி சாலை, மயிலாப்பூர், ஆழ்வார்பேட்டை, பாரதிதாசன் மெட்ரோ ரயில் நிலையம் வழியாக 2025ம் ஆண்டு நவம்பரில் போட்கிளப்பில் முடியுமென மெட்ரோ நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

The post மெரினாவில் இந்தியாவின் முதல் கடற்கரை மெட்ரோ: நான்காவது வழித்தடத்தில் சுரங்கம் தோண்டும் பணிகள் இன்று தொடக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : India ,Marina ,CHENNAI ,Chennai Marina Lighthouse ,Metro ,Dinakaran ,
× RELATED இதுவரை காணாத வகையில் திடீரென மாறியது...