×

சர்வீஸ் சாலை அமைக்காமல் சுங்க கட்டணம் உயர்த்தியதுவாக்குடி சுங்கச்சாவடியை இழுத்து மூட வேண்டும்

திருவெறும்பூர், செப்.1: திருச்சி- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் சர்வீஸ் சாலையை அமைக்காமல் துவாக்குடியில் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் உயர்த்தி வசூல் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுங்கச்சாவடியை இழுத்து மூட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சிபிஎம் மாவட்ட பொதுச் செயலாளர் ராஜா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:திருச்சி-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் திருவெறும்பூர் துவாக்குடி அருகே அமைக்கப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலைத்துறையின் சுங்கச்சாவடி உள்ளிட்ட தமிழகத்தின் 25க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் உபயோகிப்பாளர் கட்டணத்தை உயர்த்தி வருவதை வாபஸ் பெற வேண்டும்.

மேலும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள திருச்சி துவாக்குடி சுங்கச்சாவடியை பொறுத்தவரையில் கடந்த 2006ம் ஆண்டு 4 வழிச்சாலை அமைத்தபோது திருச்சி பழைய பால்பண்னை முதல் துவாக்குடி வரை அணுகுசாலை (சர்வீஸ் ரோடு) அமைக்காமல் 4 வழிச்சாலை விதிகளை மீறி சட்டத்திற்கு புறம்பாக 14.5 கிலோமீட்டருக்கு சாலை அமைக்கப்பட்டது. அதன் விளைவாக கடந்த 16 ஆண்டுகளாக சுமார் 1,500க்கும் மேற்பட்டோர் சாலை விபத்தில் மரணமடைந்துள்ளார் ஆயிரக்கணக்கானோர் நிரந்தர ஊனமடைந்துள்ளனர். தமிழகத்திலேயே அதிகமாக விபத்து நடக்கும் சாலையாக திருச்சி-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை மாறியுள்ளது. எனவே தேசிய நெடுஞ்சாலைத்துறை அணுகுசாலை அமைக்காத நிலையில் மனித உயிர் பலியாவதற்கு பொறுப்பேற்று சுங்கச்சாவடி வசூல் செய்வதை நிறுத்தி துவாக்குடி சங்கச்சாவடியை நிரந்தரமாக மூட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.இதற்கிடையில் துவாக்குடி சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு நேற்று காலை போராட்டம் நடத்தப் போவதாகவும், தேமுதிக சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப் போவதாகவும் அறிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post சர்வீஸ் சாலை அமைக்காமல் சுங்க கட்டணம் உயர்த்தியதுவாக்குடி சுங்கச்சாவடியை இழுத்து மூட வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Served Road ,Vakudi Customs ,Thiruvedumpur ,Tuvakudi ,Trich-Thanjavur National Highway ,Serving RoadWakudi ,Dinakaran ,
× RELATED திருவெறும்பூர் அருகே 3 பேர் கொலை...