திருச்சி, செப். 1: மாநகராட்சி பகுதிகளில் இன்று நடைபெறும் சிறப்பு காய்ச்சல் முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி கமிஷனர் வைத்திநாதன் கேட்டுக்கொண்டுள்ளார்.
திருச்சி மாநகராட்சி கமிஷனர் வைத்திநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்தும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி மாநகர பகுதிகளில் இன்று (1ம் தேதி) சிறப்பு காய்ச்சல் முகாம் நடத்தப்பட உள்ளது.
அதன்படி இன்று காலை நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட பீமநகர் பக்காளி தெரு, பீரங்கி குளம் மேலமாசிபாளையம் தெரு, இ.பி.ரோடு அண்ணா நகர், எடமலைப்பட்டிபுதூர் சக்தி விநாயகர் கோவில் தெரு, காந்திபுரம் சுப்ரமணியபுரம், இருதயபுரம் சங்கிலியாண்டபுரம் பிச்சை நகர் அங்கன்வாடி மையம், காமராஜ் நகர் பெலிக்கன் கோவில் தெரு, காட்டூர் ஜெகநாதபுரம், மேலக்கல்கண்டார் கோட்டை கொட்டப்படடு அங்கன்வாடி மையம், பெரிய மிளகுபாறை ராக்கின்ஸ் ரோடு, ராமலிங்கநகர் குமரன்நகர், ரங்கம் கன்னியப்பன் தெரு, தென்னூர் காயிதே மில்லத்நகர், திருவெறும்பூர் காந்திநகர், திருவானைக்காவல் சங்கர் நகர், உறையூர் வண்டிக்கார தெரு ஆகிய பகுதிகளில் சிறப்பு காய்ச்சல் முகாம் காலை நடைபெறுகிறது.
அதுபோல் இன்று மாலை இதே ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட பகுதிகளான அடைக்கலமாதா கோவில் தெரு, தையல்கார தெரு, விறகுபேட்டை, ஸ்டாலின்நகர், அண்ணாமலை நகர், சங்கிலியாண்டபுரம் முக்கிய அங்கன்வாடி மையம், டிஎஸ்என் அவென்யூ, ஸ்டாலின் நகர், காமன் மேடை, கோரிமேடு, சீனிவாச நகர், கெரைக்கார தெரு, வடக்கு தெரு மன்னார்புரம், மலைவாசல், சின்னசாமி நகர், நவல்பட்டு ரோடு மங்கம்மா நகர், பாக்குபேட்டைஆகிய இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம் நடக்கிறது.இந்த முகாமினை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி கமிஷனர் வைத்திநாதன் தெரிவித்துள்ளார்.
The post 8 கிலோ குட்கா பறிமுதல்திருச்சி மாநகராட்சி பகுதிகளில்இன்று சிறப்பு காய்ச்சல் முகாம் appeared first on Dinakaran.