×

சேலம், தூத்துக்குடி,திருப்பூருக்கு 3750 டன் அரிசி

தஞ்சாவூர். செப்.1: தஞ்சாவூர், பட்டுக்கோட்டை ரயில் நிலையங்களில் இருந்து 3,750 டன் அரிசி சேலம், தூத்துக்குடி, திருப்பூருக்கு பொது விநியோக திட்டத்திற்காக சரக்கு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டன. மிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் தஞ்சாவூர் மாவட்டத்தில் விளைவிக்கப்படும் நெல், கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக லாரிகள், சரக்கு ரயில்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நெல் அரவை செய்யப்பட்டு, பொது வினியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.இதுதவிர மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகளுக்கும் அனுப்பப்படும்.

அதன்படி நேற்று மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகள் மற்றும் சேமிப்பு கிடங்குகளில் இருந்து 3750 டன் அரிசி தஞ்சாவூர், பட்டுக்கோட்டை ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் தஞ்சாவூரில் இருந்து தலா 1250 டன் அரிசி 42 வேகன்களில் ஏற்றப்பட்டு சேலம் மற்றும் தூத்துக்குடிக்கு சரக்கு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டது. தேபோல் பட்டுக்கோட்டையில் இருந்து 1250 டன் அரிசி சரக்கு ரயிலில் 21 வேகன்களில் ஏற்றப்பட்டு திருப்பூருக்கு பொது விநியோக திட்டத்திற்காக அனுப்பி வைக்கப்பட்டது.

 வேளாண்மைத்துறை தகவல்
நாற்றங்காலில் 30 நாட்களுக்கும் மேலாக வளர்ந்த நாற்றுக்களை பறித்து கட்டு கட்டும் பணி மற்றும் களை எடுக்கும் பணிகளில் விவசாய தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சில பகுதிகளில் விவசாயிகள் பாய்நாற்றங்கால் வாங்கி சாகுபடி பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
நெல் சாகுபடிக்கு தேவையான யூரியா 7.827 டன்னும், டி.ஏ.பி. 2.823 டன்னும், பொட்டாஷ் 1,858 டன்னும், காம்ப்ளக்ஸ் உரம் 3,694 டன்னும் தனியார் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

The post சேலம், தூத்துக்குடி,திருப்பூருக்கு 3750 டன் அரிசி appeared first on Dinakaran.

Tags : Salem ,Thoothukudi ,Tirupur ,Thanjavur ,Pattukottai ,Salem, ,Thoothukudi, ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி