×

அல்லிநகரத்தில் வீட்டில் பாத்திரங்கள், பணம் திருட்டு

 

ஆண்டிபட்டி, செப். 1: தேனி, அல்லிநகரம் பகுதியை சேர்ந்தவர் வெள்ளையன் என்பவரின் மகன் செல்வம்(51). இவர் அங்குள்ள பாண்டி கோவில் பின்புறம் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். செல்வம் டிஸ்டி பொம்மைகள் செய்து வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 25ம் தேதி இரவு அவரது வீட்டை உள்ளே பூட்டி விட்டு அருகில் உள்ள அண்ணன் வீட்டு வாசலில் செல்வம் மற்றும் அவரது மனைவியும் தூங்கி கொண்டிருந்ததாக தெரிகிறது. மறுநாள் காலையில் பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, வீட்டிலிருந்த பாத்திரங்கள், குத்துவிளக்கு, சிலிண்டர் மற்றும் 4500 ரூபாய் பணம் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து செல்வம் நேற்று முன்தினம் அல்லிநகரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post அல்லிநகரத்தில் வீட்டில் பாத்திரங்கள், பணம் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Allinagar ,Antipatti ,Selvam ,Valdiyan ,Allinagaram ,Theni ,Pandi ,Dinakaran ,
× RELATED தேனி அல்லிநகரத்தில் மின்தடையை நீக்க வலியுறுத்தி கலெக்டரிடம் மனு