×

ஊட்டி தாவரவியல் பூங்கா சாலையில் உள்ள மரங்களை அகற்ற கோரிக்கை

 

ஊட்டி, செப்.1: ஊட்டி தாவரவியல் பூங்கா செல்லும் சாலையோரங்களில் உள்ள ராட்சத மரங்களால் விபத்து அபாயம் தொடர்கிறது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் துவங்கி 2 மாதங்கள் தென்மேற்கு பருவமழை பெய்யும். அதேபோல், அக்டோபர் மாதம் துவங்கி 2 மாதங்கள் வடகிழக்கு பருவமழை பெய்யும். இச்சமயங்களில் பலத்த சூறாவளி காற்று வீசுவது வழக்கம்.
அப்போது சாலையோரங்களில் உள்ள மரங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு அருகேயுள்ள மரங்கள் விழுந்து விபத்து ஏற்படுகிறது. இந்நிலையில், தற்போது பெய்து வரும் மழையினால் பல்ேவறு பகுதிகளிலும் மரங்கள் விழுந்து வருகின்றன.

தொடர்ந்து சாலையோரங்களில் உள்ள மரங்களையும், குடியிருப்புகளுக்கு அருகேயுள்ள மரங்களையும் அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதையடுத்து சாலையோரங்களில் மற்றும் குடியிருப்புகளின் அருகேயுள்ள மரங்களை தற்போது அகற்றும் பணியில் வருவாய்த்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் செல்லும் ஊட்டி தாவரவியல் பூங்கா சாலையில், பிற்படுத்தப்பட்டோர் மாணவிகள் விடுதி அருகே வளர்ந்துள்ள ராட்சத மரங்களால் விபத்து அபாயம் உள்ளதால் இந்த மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

The post ஊட்டி தாவரவியல் பூங்கா சாலையில் உள்ள மரங்களை அகற்ற கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Ooty Botanical Garden Road ,Ooty ,Ooty Botanical Gardens ,Dinakaran ,
× RELATED கோடை சீசன் நடவு பணிகளுக்காக ஊட்டி...