×

திண்டுக்கல் மாவட்டத்தில் ரேஷன் பொருட்கள் கடத்தலா? கட்டணமில்லா எண்ணுக்கு கூப்பிடுங்க

திண்டுக்கல், செப். 1: திண்டுக்கல் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறைக்கு பொது விநியோக திட்ட பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடுவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதனை தடுக்கும் விதமாக பொதுமக்கள் புகார்களை தெரிவிக்க ‘கட்டணமில்லா எண் 1800 599 5950’ வெளியிடப்பட்டது. இதுதொடர்பாக டி.ஜி.பி வன்னிய பெருமாள் உத்தரவின்படி, மதுரை மண்டல எஸ்.பி விஜயகார்த்திக்ராஜ் மேற்பார்வையில், டி.எஸ்.பி. ஜெகதீசன் தலைமையில், திண்டுக்கல் இன்ஸ்பெக்டர் கீதா, எஸ்ஐ கார்த்திக் உள்ளிட்ட குழுவினர் போஸ்டர் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் தகவல் தெரிவிப்பவர்களின் பெயர் விபரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

The post திண்டுக்கல் மாவட்டத்தில் ரேஷன் பொருட்கள் கடத்தலா? கட்டணமில்லா எண்ணுக்கு கூப்பிடுங்க appeared first on Dinakaran.

Tags : Dindukal District ,Dindukal ,Dintugul District Citizensary Supply Crime Investigation Department ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன்...