×

நிலத் தகராறில் மோதல்

வாழப்பாடி, செப்.1: சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகேயுள்ள கருமந்துறை கிலாகாடு பகுதியில், பெத்தநாயக்கன்பாளையம் வடக்கு ஒன்றிய தேமுதிக செயலாளராக இருப்பவர் குமார். இவருக்கு சொந்தமாக 2 ஏக்கர் நிலம் உள்ளது. கடந்த 2016ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், தேமுதிக சார்பில் போட்டியிடுவதற்காக பனைமடல் பகுதியைச் சேர்ந்த சக்தி என்பவருக்கு குமார் தனது நிலத்தை கிரயம் செய்து கொடுத்து, 10 லட்சம் ரூபாயை பெற்றார். அந்த பணத்தை திருப்பி செலுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டதால், அந்த நிலத்தை எடப்பட்டியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி தமிழரசன் என்பவருக்கு சக்தி பவர் செய்து கொடுத்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த 28ம் தேதி மாலை, தமிழரசன் உள்பட 20 பேர், அந்த நிலத்தில் கம்பி வேலியை அமைக்க சென்றனர். அப்போது, அங்கு வந்த குமார் தரப்பிற்கும், தமிழரசன் தரப்பிற்கும் தகராறு ஏற்பட்டது. இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டு சேலம் மற்றும் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுபற்றி தேமுதிக ஒன்றிய செயலாளர் குமார் கொடுத்த புகாரின் பேரில், அதிமுக தமிழரசன் உள்பட 20 பேர் மீது எஸ்சி, எஸ்டி ஆகிய சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதேபோல், தமிழரசன் கொடுத்த புகாரின் பேரில், தேமுதிக குமார் உள்பட 20 பேர் மீது வழக்கு பதிவு செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post நிலத் தகராறில் மோதல் appeared first on Dinakaran.

Tags : Vazhappady ,Pethanayakkanpalayam North Union Democratic Party ,Karumantura Kilakadu ,Vazhappady, Salem district ,Dinakaran ,
× RELATED ₹24 லட்சத்திற்கு பருத்தி ஏலம்