×

கட்டுமான அலுவலகத்தில் ₹85,000 பொருட்கள் திருட்டு

தர்மபுரி, செப்.1: தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே கோவிலூர் புத்தூர் கிராமத்தில், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. இங்கு திட்ட மேலாளராக பணியாற்றி வரும் கும்பகோணத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவர், அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணித்தள பொறுப்பாளராக உள்ளார். கடந்த 23ம் தேதி இரவு, பணியை முடித்துக்கொண்டு அங்குள்ள அலுவலகத்தின் கதவை பூட்டி விட்டுச் சென்றார். மறுநாள் காலை சென்று பார்த்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை கண்டு திடுக்கிட்டார்.

உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த 2 லேப்டாப்கள், மிஷின்கள் மற்றும் தளவாட பொருட்கள் உள்பட ₹85ஆயிரம் மதிப்பிலான பொருட்களை காணவில்லை. நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள், பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பொருட்களை திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து சண்முகம் அளித்த புகாரின்பேரில், நல்லம்பள்ளி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post கட்டுமான அலுவலகத்தில் ₹85,000 பொருட்கள் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Kovilur Puthur ,Nallampally, Dharmapuri district ,Tamil Nadu Slum Replacement Board ,Dinakaran ,
× RELATED அதிகமாக மது குடித்து விஏஓ உதவியாளர் சாவு