×

தொட்டம்பட்டி பகுதியில் சாதிய அடையாளம் அழித்த பெண்களுக்கு எஸ்பி பாராட்டு

ஓட்டப்பிடாரம், செப். 1: பசுவந்தனை அருகே தொட்டம்பட்டி பகுதியில் தாங்களாக முன்வந்து சாதி அடையாளங்களை அழித்த பெண்களுக்கு எஸ்பி பாலாஜி சரவணன் பாராட்டு தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் அனைத்து கிராமங்களிலும் போலீசார், பொதுமக்கள் முன்னிலையில் மாற்றத்தை தேடி எனும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக போலீசார் முன்னிலையில் கிராமங்களில் சாலை, பாலம், தண்ணீர் தொட்டி, மின்கம்பங்களில் விதிமுறைகள் மீறி எழுதப்பட்ட சாதி மற்றும் மதம் தொடர்பான வாசகங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி பசுவந்தனை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துமணி தலைமையிலான போலீசார் முன்னிலையில் தொட்டம்பட்டி கிராமத்தில் மின்கம்பங்கள் உள்ளிட்ட பல்வேறு பொது இடங்களில் இருந்த சாதி அடையாளங்களை அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் தாங்களாகவே ஆர்வத்துடன் முன்வந்து வர்ணம் பூசி அழித்தனர். இவ்வாறு அழித்த பெண்களை எஸ்பி பாலாஜி சரவணன் பாராட்டினார். இதேபோல் சாத்தான்குளம் காவல் நிலையத்திற்குட்பட்ட புதுக்கிணறு, புதுக்குளம், சிதம்பராபுரம் பகுதியில் எஸ்ஐ சுரேஷ்குமார் தலைமையிலும், தட்டார்மடம் காவல் நிலையத்திற்குட்பட்ட பெரியதாழை, ராஜிவ் நகர், அச்சம்பாடு ஆகிய பகுதியில் எஸ்ஐக்கள் முகம்மது ரபீக், நடராஜன் ஆகியோர் தலைமையில் மின்கம்பங்கள், தண்ணீர் தொட்டி, பாலம் உள்ளிட்ட பகுதியில் வரையப்பட்டிருந்த சாதி, மத அடையாளங்களை அழித்தனர்.

The post தொட்டம்பட்டி பகுதியில் சாதிய அடையாளம் அழித்த பெண்களுக்கு எஸ்பி பாராட்டு appeared first on Dinakaran.

Tags : SP ,Thottampatti ,Ottapidaram ,Balaji ,Pasuvanthana ,
× RELATED ஈரோட்டில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை