×

நெற்கட்டும்செவலில் இன்று 308வது பிறந்த நாள் விழா பூலித்தேவர் சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை திமுக மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் அறிக்கை

சுரண்டை, செப். 1: தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெய பாலன் வெளியிட்ட அறிக்கை: சுதந்திரப் போராட்ட வீரர் மாமன்னன் பூலித்தேவரின் 308வது பிறந்தநாள் இன்று (1ம் தேதி) கொண்டாடப்படுகிறது.இதையொட்டி தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் அருகே நெற்கட்டும்செவலில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் இன்று (1ம் தேதி) காலை 9.10 மணிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர். எனவே, இதில் திமுக சார்பில் கட்சி நிர்வாகிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், கூட்டுறவு, உள்ளாட்சி பிரதிநிதிகள், சார்பு அணியினர், தொண்டர்கள் உள்ளிட்ட அனைவரும் திரளாகப் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

இதே போல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் இன்று காலை 10 மணிக்கு தனது தலைமையில் தமிழக காங்கிரஸ் மாநில பொருளாளர் ரூபி மனோகரன் எம்எல்ஏ, நெல்லை மாநகர் மாவட்டத் தலைவர் சங்கரபாண்டியன், கிழக்கு மாவட்டத் தலைவர் கேபிகே ஜெயக்குமார் தனசிங் உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளதாக தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவர் பழனி நாடார் எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் இதில் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் தவறாமல் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

The post நெற்கட்டும்செவலில் இன்று 308வது பிறந்த நாள் விழா பூலித்தேவர் சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை திமுக மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Poolithevar ,Nerkathumsewal ,Sexploit ,Jaya Balan ,Southern District ,Tengkasi ,308th Birthday Festival ,Nedkatumsewal ,Poolittevar ,Dizhagam District ,
× RELATED நெல்லை டவுன் பால் வியாபாரி கொலை வழக்கில் இருவர் கைது