×

தென்னாப்பிரிக்காவில் 5 மாடி கட்டிடத்தில் தீ 73 பேர் பரிதாப பலி

ஜோகன்ஸ்பர்க்: தென்னாப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பர்க் நகரில் 5 மாடி கட்டிடத்தில் நேற்று அதிகாலை திடீர் என தீப்பற்றியது. இந்த தீ மளமளவென பரவியது. இதனால் தூக்கத்தில் இருந்து விழித்த குடியிருப்பாளர்கள் அலறி கூச்சலிட்டனர். தளங்களுக்கு இடையே இருந்த கட்டமைப்புக்கள் காரணமாக குடியிருப்பில் இருந்து வெளியேறுவதற்கு முயற்சித்தவர்கள் வெளியே வரமுடியாமல் தீயில் சிக்கி உயிரிழந்தனர். தீ விபத்து குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த பயங்கர தீ விபத்தில்73 பேர் உயிரிழந்தனர். இவர்களது சடலங்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் காயமடைந்த 52 பேர் மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகின்றது. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

The post தென்னாப்பிரிக்காவில் 5 மாடி கட்டிடத்தில் தீ 73 பேர் பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : South Africa ,Johannesburg ,Johannesburg, South Africa ,Dinakaran ,
× RELATED சில்லி பாயின்ட்…