×

ஆசிய கோப்பை கிரிக்கெட் 164 ரன்னில் சுருண்ட வங்கம்

பல்லேகலே: ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் 2வது லீக் ஆட்டத்தில் நேற்று வங்கதேசம்-இலங்கை அணிகள் மோதின. இலங்கையின் பல்லேகலே நகரில் நடந்த இந்தப்போட்டியில் டாஸ் வென்ற வங்கம் முதலில் களமிறங்கியது. 2வது ஓவரிலேயே வங்கத்தின் தன்ஜித் விக்கெட்டை இலங்கை கைப்பற்றியது. தொடர்ந்து விக்கெட்களை இழந்த வங்கம் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 75ரன் எடுத்திருந்தது. அதன் பிறகு நஜ்மல் ஷான்டோ, தவ்ஹித் இரிதய் இணை பொறுமையுடன் விளையாடி 4வது விக்கெட்டுக்கு 59ரன் சேர்த்தது. தவ்ஹித் 20 ரன்னில் வெளியேற ஷான்டோ நீண்ட நேரம் தாக்குப்பிடித்து அரை சதத்தை கடந்தார். மற்றவர்கள் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். ஷாண்டாவும் 8வது விக்கெட்டாக 89ரன்னில் வெளியேற வங்கதேச இன்னிங்ஸ் உடனே முடிவுக்கு வந்தது. அந்த அணி 42.4ஓவரில் 164ரன்னுக்கு ஆட்டமிழந்தது. ஆசிய கோப்பை போட்டியில் இலங்கைக்கு எதிராக வங்கதேசம் எடுத்த அதிகபட்ச ஸ்கோர் இது என்பது குறிப்பிட்ததக்கது. இலங்கை தரப்பில் மதீசா 4, மஹீஷ் 2 விக்கெட் எடுத்தனர். அதனையடுத்து 165ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை விளையாடத் தொடங்கியது.

The post ஆசிய கோப்பை கிரிக்கெட் 164 ரன்னில் சுருண்ட வங்கம் appeared first on Dinakaran.

Tags : Asian Cup Cricket ,Pallegalle ,Bangladesh ,Sri Lanka ,Asian Cup One Day Cricket ,Palleckale ,Dinakaran ,
× RELATED வங்கதேச பெண்களுக்கு எதிராக இந்தியா ஹாட்ரிக் வெற்றி