×

ஆஸியிடம் சரண்டரான தெ.ஆ

டர்பன்: தென் ஆப்ரிக்கா-ஆஸ்திரேலியா இடையிலான முதல் டி20 ஆட்டம் டர்பனில் நடந்தது. டாஸ் வென்ற தெ.ஆ பந்து வீச்சை தேர்வு செய்ய, ஆஸி பேட்டிங்கை தொடங்கியது. இடையிடையே விக்கெட்கள் வீழ்ந்தாலும் அந்த அணி 20ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 226ரன் குவித்தது. ஆஸியின் டிம் டேவிட் 64(28பந்து, 7பவுண்டரி, 5 சிக்சர்), கேப்டன் மிட்செல் மார்ஷ் ஆட்டமிழக்காமல் 92(49பந்து, 13பவுண்டரி, 2 சிக்சர்) ரன் வெளுத்தனர். தெ.ஆ தரப்பில் லிஸ்ஸாட் வில்லியம்ஸ் 3விக்கெட் கைப்பற்றினார். அதனையடுத்து 227ரன் எடுத்தால் என்ற இமாலய இலக்குடன் களம் கண்ட தெ.ஆவை 15.3ஓவரில் 115ரன்னிலேயே சுருட்டியது ஆஸி. தெ.ஆ வீரர் ரீசா ஹெண்டிரிக்ஸ் மட்டும் 56(43பந்து, 5பவுண்டரி, 2 சிக்சர்) ரன் விளாசினர். ஆஸி தரப்பில் தன்வீர் சங்ஹா 4, மார்கஸ் ஸ்டோய்னிஸ் 3 விக்கெட் வீழத்தினர். ஆஸி 111 ரன் வித்தியாசத்தில் கிடைத்த வெற்றியின் மூலம் 3 ஆட்டங்களை கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்று உள்ளது.

* அறிமுகமாகிறார் டிம் டேவிட்
டிம் தனது அதிரடி ஆட்டம் காரணமாக தெ.ஆவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான ஆஸி அணியில் அறிமுகமாக உள்ளார். செப்.7ம் தேதி தொடங்க உள்ள ஒருநாள் தொடருக்கான மிட்சல் மார்ஷ் தலைமையிலான ஆஸி அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

The post ஆஸியிடம் சரண்டரான தெ.ஆ appeared first on Dinakaran.

Tags : Aussies ,Durban ,T20 ,South Africa ,Australia ,Thea ,Dinakaran ,
× RELATED சில்லிபாயிண்ட்….