×

ஜி-20 உச்சி மாநாட்டில் ஜின்பிங் பங்கேற்பாரா? சீனாவிடம் இருந்து அதிகாரப்பூர்வமாக தகவல் வரவில்லை

புதுடெல்லி: ஜி-20 உச்சி மாநாட்டில் அதிபர் ஜின்பிங் பங்கேற்பது குறித்து இன்னும் சீனாவிடம் இருந்து இன்னும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரவில்லை. டெல்லியில் 9 மற்றும் 10ம் தேதிகளில் ஜி-20 உச்சி மாநாட்டை இந்தியா நடத்துகிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸ், ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே,பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டி சில்வா உட்பட பெரும்பாலான தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். ரஷ்யா அதிபர் புடின் தன்னால் கலந்து கொள்ள இயலாது என பிரதமர் மோடியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், சீன அதிபர் ஜின்பிங் மாநாட்டில் பங்கேற்பாரா என்பது பற்றி இதுவரை தகவல் வரவில்லை. ஜி-20 மாநாட்டில் பங்கேற்க ஜின்பிங் டெல்லி செல்ல மாட்டார் என வந்த தகவல் குறித்து சீன வெளியுறவு துறை அதிகாரியிடம் கேட்டபோது, ‘‘இது பற்றி பேசுவதற்கு தற்போது என்னிடம் எந்த தகவலும் இல்லை’’ என்றார்.

* மோடிக்கு அருணாச்சல் எம்எல்ஏ கடிதம்
வரைபட விவகாரம் தொடர்பாக சீனாவிடம் பிரச்னை எழுப்ப வேண்டும் என அருணாச்சல் காங்கிரஸ் எம்எல்ஏ நினாங் எரிங் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில்,இந்தியாவின் நில பகுதிகளை தங்களுடைய பகுதி என சீனாவின் வரைபடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது அருணாச்சல் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜி 20 மாநாட்டில் கலந்து கொள்ள வரும் ஜின்பிங்கிடம் இதுகுறித்து பிரதமர் பேசவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

The post ஜி-20 உச்சி மாநாட்டில் ஜின்பிங் பங்கேற்பாரா? சீனாவிடம் இருந்து அதிகாரப்பூர்வமாக தகவல் வரவில்லை appeared first on Dinakaran.

Tags : Jinping ,G-20 Summit ,China ,New Delhi ,Chancellor ,Dinakaran ,
× RELATED சீனாவை போல் வளர வேண்டுமானால்...