
- திருப்பதி
- ஏழு மலாயன்
- கோவில்
- பிரமோத்ஸவ விழா
- தர்ம
- திருப்பதி ஏழுமலையான் கோவில்...
- திருப்பதி ஏழு மலையான் கோயில்
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரமோற்சவ விழாவில் சாமானிய பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று செயல் அதிகாரி தர்மா தெரிவித்துள்ளார். திருமலையில் உள்ள அன்னமையா பவனில் ஆண்டு பிரமோற்சவத்தின் ஒன்பது நாள் கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகளை செயல் அதிகாரி தர்மா நேற்று ஆய்வு செய்தார். பின்னர் நிருபர்களிடம் செயல் அதிகாரி தர்மா கூறியதாவது: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் செப்டம்பர் 18ம் தேதி மாநில அரசின் சார்பில் பட்டு வஸ்திரங்களை வழங்குவார். பிரமோற்சவத்தின்போது காலை மற்றும் மாலை இரு வேளைகளிலும் சுவாமி வாகன சேவைகளை நடத்தும். மதிப்புமிக்க கருட சேவை இரவு 7 மணி முதல் அதிகபட்ச பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கும். வாகன சேவை மற்றும் மூல மூர்த்தி தரிசனத்தின்போது சாதாரண பக்தர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
இந்த காலகட்டத்தில் விஐபி பிரேக் தரிசனத்திற்காக பரிந்துரை கடிதங்கள் எதுவும் பெறப்படாது. கருட சேவையை முன்னிட்டு செப்டம்பர் 22ம் தேதி மலை ரோடுகளில் இரு சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒன்பது மாநிலங்களைச் சேர்ந்த கலைஞர்கள் மாட வீதிகளில் வாகன சேவைகள் முன் தனித்துவமான கலாச்சார நிகழ்ச்சிகளை வழங்குவார்கள், சிறப்பு அலங்காரங்களுடன் யானைகள், குதிரைகள், காளைகள் போன்றவற்றின் அணிவகுப்பை மேற்பார்வையிட கேரளாவைச் சேர்ந்த நிபுணர்கள் வர உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.
The post திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரமோற்சவ விழாவில் சாமானிய பக்தர்களுக்கு முன்னுரிமை appeared first on Dinakaran.