×

விநாயகர் சதுர்த்திக்கு காசு கொடுங்க… இந்து அமைப்பினர் கல்லூரியில் தகராறு

நாகர்கோவில்: நாகர்கோவிலில் கன்னியாகுமரி சி.எஸ்.ஐ., பேராயத்தால் நிர்வகிக்கப்படும் கல்லூரி ஒன்றில் விநாயகர் சதுர்த்திக்கு நன்கொடை கேட்டு இந்து அமைப்பு நிர்வாகிகள் சிலர் காரில் உள்ளே சென்றனர். அப்போது அங்கிருந்தவர்கள் நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்டுள்ளனர். இதனால் அவர்களுக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டது. ‘நாங்க விநாயகர் சதுர்த்திக்கு பைசா வாங்குவோம், அன்னதானத்துக்கு பைசா வாங்குவோம் இதெல்லாம் தப்பா சார்… நாங்க இந்து சேனா … நரேந்திரமோடி … எங்களுக்கு காசு இல்லியா? என்று அவர்கள் எதிர்கேள்வி கேட்க வாக்குவாதம் எழுந்தது. அவர்களை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். அப்போது அவர்கள் கோஷம் எழுப்பினர். மேலும் அவர்கள் அங்கிருந்து மிரட்டல் விடுத்த வண்ணம் காரில் புறப்பட்டு சென்றனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

The post விநாயகர் சதுர்த்திக்கு காசு கொடுங்க… இந்து அமைப்பினர் கல்லூரியில் தகராறு appeared first on Dinakaran.

Tags : Vinayagar Chaturthi ,Nagercoil ,Nagercoil, ,Kanyakumari ,CSI ,
× RELATED குமரியில் வண்ண, வண்ண ஸ்டார்கள்...