×

95 வயது மூதாட்டி எரித்துக் கொலை

திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே அழகமடை கிராமத்தை சேர்ந்தவர்கள் சித்திரவேலு (75), ராசு (71). உறவினர்களான இருவரின் குடும்பத்திற்கிடையே சொத்து தகராறு பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவில் ராசுவின் அம்மா பாப்பு (95) வீட்டின் முன்பு கட்டிலிலும், அவரது மகன் ராசு மற்றும் மருமகள் மங்கையர்கரசி வீட்டின் உள்ளே தூங்கிக் கொண்டிருந்தனர்.

திடீரென பாப்புவின் அலறல் சத்தம் கேட்டு ராசு வெளியே வந்தபோது, வீட்டின் வாசலில் இரு பக்கமும் விறகுகளை அடுக்கி தீ வைக்கப்பட்டிருந்தது. பாப்பு படுத்து இருந்த கட்டில் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைக்கப்பட்டிருந்ததால் தீயில் எரிந்து அலறி துடித்துள்ளார்.வீட்டை விட்டு வெளியில் வந்த ராசுவை பார்த்தவுடன், கையில் இருந்த தீப்பந்தத்தை தூக்கி எறிந்து விட்டு சித்திரவேலு தப்பி ஓடினார். தீயில் பலத்த தீக்காயமடைந்த மூதாட்டி பாப்பு, ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார்.

The post 95 வயது மூதாட்டி எரித்துக் கொலை appeared first on Dinakaran.

Tags : Thiruvadanai ,Chithravelu ,Rasu ,Alagamadai ,Thiruvadanai, Ramanathapuram district ,
× RELATED திருவாடானை பஸ் ஸ்டாண்டில் பேஸ்...