×

தெற்கிலிருந்து ஒலிக்கும் குரலுக்காக காத்திருங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆடியோ வெளியீடு

சென்னை: தெற்கிலிருந்து ஒலிக்கும் குரலுக்காக காத்திருங்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆடியோ பதிவு வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த சில மாதங்களாக ‘உங்களில் ஒருவன்’ என்ற தலைப்பில் கேள்வி-பதில் வடிவில் பல்வேறு கருத்துகளை வீடியோ மூலமாக பகிர்ந்து வந்தார். மேலும், ஆடியோ சீரிஸ் மூலம் மக்களுடன் பேசப்போவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில், தனது சமூக வலைதள பக்கத்தில் ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

அதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது: கடந்த சில மாதங்களாக உங்களில் ஒருவன் என்ற தலைப்பின் மூலமாக பல விஷயங்களை உங்களுடன் பகிர்ந்துள்ளேன். திமுக 75வது ஆண்டை நெருங்கிக் கொண்டிருக்கும் பழம்பெரும் கட்சி. இந்திய நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சி. அண்ணா, கலைஞர் என இந்திய நிலப்பரப்பில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய உடன்பிறப்புகள் நாங்கள், தற்போது இந்தியாவுக்காக பேச வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இருக்கிறோம்.

2024ல் முடிய போகிற பாஜ ஆட்சி, இந்தியாவை எப்படியெல்லாம் உருக்குலைத்துள்ளார்கள். எதிர்காலத்தில் நாம் கட்டமைக்கவுள்ள சமத்துவ சகோதரத்துவ இந்தியாவை பற்றி ஆடியோ தொடராக பேசவுள்ளேன். அதற்கு ‘ஸ்பீக்கிங் ஃபார் இந்தியா’ என்ற தலைப்பை வைத்துக் கொள்ளலாமா..? தெற்கிலிருந்து வரும் இந்த குரலுக்காக காத்திருங்கள்..! இவ்வாறு அந்த ஆடியோவில் கூறியுள்ளார்.

The post தெற்கிலிருந்து ஒலிக்கும் குரலுக்காக காத்திருங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆடியோ வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stal ,CHENNAI ,M. K. Stalin ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED படிவம் 20ல் கையொப்பமிட்டு வெற்றி...