×

திருமாவளவன் தலைமையில் விசிக தேர்தல் பணி கலந்தாய்வு கூட்டம்

சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் பணி கலந்தாய்வுக் கூட்டம் அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் தலைமையில் வரும் 2ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இது தொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவு: சென்னை கோயம்பேடு அருகில் உள்ள தனியார் விடுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் பணி கலந்தாய்வுக் கூட்டம் அக்கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் வரும் 2ம் தேதி மதியம் 12.30 மணி அளவில் நடைபெற உள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர்,வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 15 மாவட்டங்களைச் சார்ந்த மாவட்டச் செயலாளர்கள், மண்டலப் பொறுப்பாளர்கள் மற்றும் வடமண்டல தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும்.

The post திருமாவளவன் தலைமையில் விசிக தேர்தல் பணி கலந்தாய்வு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Thirumavalavan ,Chennai ,Liberation Tigers Party ,Vishika ,
× RELATED அரசியலமைப்பு படி கவர்னர்தான் வேந்தர்...