×

அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் அதிமுகவினர் 300 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு

தண்டையார்பேட்டை: புதுவண்ணாரப்பேட்டையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய அதிமுகவினர் 300 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்குவதாக அறிவித்தது. அதற்கான பணிகள் தற்போது நடந்து வரும் நிலையில் அனைவருக்கும் உரிமைத் தொகை வழங்க வேண்டும் எனக் கூறி நேற்று முன்தினம் காலை புதுவண்ணாரப்பேட்டையில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை. அதையும் மீறி மாவட்டச் செயலாளர் ராஜேஷ் தலைமையில் பெண்கள் உள்பட 300க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியது, பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியது உள்ளிட்ட பிரிவின்கீழ் 300க்கும் மேற்பட்ட அதிமுகவினர் மீது நேற்று புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

The post அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் அதிமுகவினர் 300 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Thandaiyarpet ,Puduvannarpet ,Tamil Nadu government ,Dinakaran ,
× RELATED தமிழக அரசு உடனடியாக பழைய பேருந்துகளை...