×

2 இன்ஸ்பெக்டர் உள்பட 17 போலீசார் ஓய்வு: கமிஷனர் சான்றிதழ் வழங்கினார்

சென்னை: சென்னை மாநகர காவல்துறையில் நேற்று பணி ஓய்வு பெற்ற 2 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 17 காவலர்களை நேரில் அழைத்து போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். சென்னை மாநகர காவல்துறையில் 25 ஆண்டுகள் முதல் 39 ஆண்டுகள் வரை சிறப்பாக பணியாற்றிய 2 இன்ஸ்பெக்டர்கள், 5 உதவி ஆய்வாளர்கள், 9 சிறப்பு உதவி ஆய்வாளர்கள், ஒரு தலைமை காவலர் என மொத்தம் 17 பேர் நேற்று பணி ஓய்வு பெற்றனர். அவர்களை கவுரவிக்கும் வகையில் மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர், நேற்று வேப்பேரியில் உள்ள தனது அலுவலகத்திற்கு குடும்பத்துடன் நேரில் அழைத்தார். மேலும், இன்ஸ்பெக்டர்கள் உள்பட 17 பேருக்கும் பணி நிறைவுக்கான பாராட்டு சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார். நிகழ்ச்சியின் போது மாநகர காவல்துறை நிர்வாக பிரிவு துணை கமிஷனர் சீனிவாசன், நவீன கட்டுப்பாட்டு அறை துணை கமிஷனர் மகேஸ்வரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post 2 இன்ஸ்பெக்டர் உள்பட 17 போலீசார் ஓய்வு: கமிஷனர் சான்றிதழ் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Metropolitan Police ,Dinakaran ,
× RELATED சென்னை மாநகர காவல்துறையில் துணை...