×

ஆரணி அரசு பள்ளியில் மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள்: எம்எல்ஏ வழங்கினார்

பெரியபாளையம்: ஆரணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்1 மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை பொன்னேரி எம்எல்ஏ துரை.சந்திரசேகர் வழங்கினார். திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த ஆரணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் காவேரி தலைமையில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி எம்எல்ஏ துரை.சந்திரசேகர் கலந்துகொண்டு, 172 மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினார்.

பின்னர் தமிழக அரசின் பல்வேறு சாதனை திட்டங்கள் குறித்து மாணவிகளுக்கு அவர் எடுத்துரைத்தார். நிகழ்ச்சியில் ஆரணி பேரூராட்சி தலைவர் ராஜேஸ்வரி, துணை தலைவர் சுகுமார், ஆரணி திமுக நகரச் செயலாளர் முத்து, மாவட்ட பிரதிநிதி கரிகாலன், கவுன்சிலர்கள் கண்ணதாசன், ரஹ்மான்கான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி தலைமை ஆசிரியர் தேவராஜன் நன்றி கூறினார்.

The post ஆரணி அரசு பள்ளியில் மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள்: எம்எல்ஏ வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Arani Govt School ,MLA ,Periyapalayam ,Ponneri ,Durai.Chandrasekhar ,Arani Government Girls Higher Secondary School Plus ,Arani Government School ,Dinakaran ,
× RELATED காணும் பொங்கலன்று பைக் ரேஸில்...