×

பள்ளிப்பட்டு அருகே நீர் ஓடையில் மணல் அள்ளி கரும்பு தோட்டத்தில் பதுக்கல்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு அருகே நீர் ஓடையில் மணல் அள்ளி கரும்பு தோட்டத்தில் பதுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு கொசஸ்தலை ஆற்றில் தமிழ்நாடு அரசு சார்பில் மணல் குவாரி அமைத்து குறைந்த விலைக்கு மணல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அத்திமாஞ்சேரி கிராமத்திற்கு மேற்கு பகுதியில் பெரிய ஏரி நீர் ஓடையில் கூலி ஆட்கள் வைத்து இரவு நேரங்களில் மணல் அள்ளிச் சென்று கரும்பு தோட்டத்தில் விவசாயி ஒருவர் பதுக்கிவைத்து வருகிறார். அரசு அனுமதியின்றி மணல் எடுத்து கரும்பு தோட்டத்தில் பதுக்கி வரும் நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வட்டாட்சியர் மற்றும் காவல் துறையினருக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

The post பள்ளிப்பட்டு அருகே நீர் ஓடையில் மணல் அள்ளி கரும்பு தோட்டத்தில் பதுக்கல்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Pallipatu ,Tiruvallur district ,Dinakaran ,
× RELATED கலை திருவிழா கொண்டாட்டம் அரசு பள்ளி மாணவன் மாநில அளவில் முதலிடம்