×

வருவாய் துறை அதிகாரிகள் காத்திருப்பு போராட்டம்

செங்கல்பட்டு: தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் மாநில மைய முடிவின் படி, நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், ஆக்கிரமிப்பை அகற்றிய கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் மனோஜ் முனியனை மாவட்ட ஆட்சியர் ஷரவண் குமார் ஜடாவத் பணியிடை நீக்கம் செய்ததை கண்டித்தும், வட்டாசியரின் பணியிடை நீக்கத்தை ரத்து செய்ய கோரியும், கடந்த 29ம் தேதி கள்ளகுறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக முன்பு வருவாய் துறை அலுவலர்கள் போராட்டம் நடத்தி உள்ளனர்.

அப்போது, காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். இதனால் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட கலெக்டர்கள் அலுவலகம் முன் வருவாய்துறையினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டனர். அதன் ஒருபகுதியாக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கம் சார்பில், சுமார் 100க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

The post வருவாய் துறை அதிகாரிகள் காத்திருப்பு போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Tamil Nadu Revenue Officers Association State Center ,Kallakurichi ,
× RELATED செங்கல்பட்டு, திருவள்ளூர்...