×

மின் இணைப்பு வழங்க லஞ்சம் வாங்கிய வழக்கில் மின்வாரிய அதிகாரிக்கு சிறை: செங்கல்பட்டு நீதிமன்றம் தீர்ப்பு

செங்கல்பட்டு: சென்னை வேளச்சேரி பகுதியை சேர்ந்தவர் வேலு. இவர் சென்னை தாம்பரம் அடுத்த அஸ்தினாபுரம் பகுதியில் புதிதாக வீடு கட்டி வந்துள்ளார். வேலு தனது வீட்டிற்கு தற்காலிக மின் இனைப்பு பெற அஸ்தினாபுரம் மின்வாரிய அலுவலகத்தை நாடியுள்ளார். அங்கு பணியில் இருந்த மின்வாரிய அதிகாரி ஜான்சன் தேவகுமார் ஜாக்கப் மின் இணைப்பு வழங்க ₹5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் தர விரும்பாத வேலு, இதுகுறித்து சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 2008ம் ஆண்டு இவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கை 2022ம் முதல் செங்கல்பட்டு மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்தி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் செங்கல்பட்டு தலைமைக் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது வழக்கை விசாரித்து நீதிபதி ஜெய குற்றவாளியான இளநிலை மின் பொறியாளர் ஜான்சனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் ₹40 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

The post மின் இணைப்பு வழங்க லஞ்சம் வாங்கிய வழக்கில் மின்வாரிய அதிகாரிக்கு சிறை: செங்கல்பட்டு நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Velachery ,Chennai ,Asthinapuram ,Tambaram, Chennai ,Power Board ,Dinakaran ,
× RELATED சென்னையில் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆணையரை கொல்ல முயற்சி!!