×

ஒடுகத்தூர் அருகே மலை கிராமத்தில் 36 மண் குதிரைகளுக்கு 36 கிடாய் வெட்டி வழிபாடு: மலைவாழ் மக்கள் நூதன வழிபாடு

ஒடுகத்தூர்: ஒடுகத்தூர் அருகே மலைக்கிராமத்தில் 36 மண் குதிரைகளுக்கு 36 கிடா வெட்டி மலைவாழ் மக்கள் நூதன வழிபாட்டில் ஈடுபட்டனர். வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர்அருகே பீஞ்சமந்தை ஊராட்சி மலைக்கிராமம் உள்ளது. இங்கு கட்டியாபட்டு என்ற மலைக் கிராமத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களின் பாரம்பரிய திருவிழாக்களை ஆண்டுதோறும் நடத்தி வருகின்றனர். அதன்படி ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் நடக்கும் கன்னியம்மன் கோயில் திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.

அப்போது, மலைவாழ் மக்களின் பாரம்பரிய முறைப்படி 36 மண் குதிரைகளை வைத்து அதற்கு சிறப்பு அலங்காரம் செய்தனர். அதனைத் தொடர்ந்து, சிறப்பு பூஜைகள் நடத்தி ஒரு மண் குதிரைக்கு ஒரு கிடாய் என மொத்தம் 36 கிடாய்களை பலியிட்டு திருவிழாவை கொண்டாடினர். அதேபோல், 36 மண் பானைகளில் பொங்கல் வைத்து திருமணம், குழந்தை வரம் வேண்டி தங்களின் நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில், மலை கிராமத்தை சுற்றியுள்ள ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு கிடாய் விருந்து வைத்து உபசரிப்பு செய்தனர்.

The post ஒடுகத்தூர் அருகே மலை கிராமத்தில் 36 மண் குதிரைகளுக்கு 36 கிடாய் வெட்டி வழிபாடு: மலைவாழ் மக்கள் நூதன வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Odugathur ,Nuthana ,
× RELATED ஒடுகத்தூர் அருகே வனப்பகுதியில்...