×

2 மாதங்களில் 9 முறை பாம்பு கடித்தும் உயிர் பிழைத்த பள்ளி மாணவன்

பெங்களூரு: கர்நாடக மாநிலம், கலபுரகி மாவட்டம் சித்தாப்பூர் தாலுகா ஹலகார்த்தி கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார். அவரது மனைவி உஷா. இவர்களது மகன் பிரஜ்வல் (14). இவன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த ஜூலை மாதம் 3ம் தேதி பிரஜ்வல் வீட்டு பின்புறம் சிறுநீர் கழிக்க சென்றான். அப்போது அவனை பாம்பு கடித்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் 3 நாட்களுக்கு பிறகு மீண்டும் அவனை பாம்பு கடித்தது. இவ்வாறு அவனை தொடர்ந்து 6 முறை பாம்பு கடித்தது.

3 முறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமான பிரஜ்வல் 3 முறை நாட்டு மருந்து சிகிச்சையும் எடுத்து உள்ளான். இதனால் பயந்துபோன அவனது பெற்றோர் சித்தாப்பூருக்கு இடம் பெயர்ந்தனர். அங்கு ஒரு வாடகை வீட்டில் குடியேறினர். அதன் பின்னரும் அவனை 2 முறை பாம்பு கடித்துள்ளது. சிகிச்சை பெற்று வீடு திரும்பினான். இந்த நிலையில் கடந்த 27ம் தேதி 9-வது முறையாக பிரஜ்வலை பாம்பு கடித்தது. தற்போது அவன் கிம்ஸ் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறான். அவன் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். 2 மாதங்களில் 9 முறை பாம்பு கடித்தும் சிறுவன் உயிர் பிழைத்த சம்பவம் மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post 2 மாதங்களில் 9 முறை பாம்பு கடித்தும் உயிர் பிழைத்த பள்ளி மாணவன் appeared first on Dinakaran.

Tags : Bangalore ,Vijayakumar ,Thaluka Halakarthi village ,Karnataka State, ,Kalapuragi District, Chitapur ,Usha ,
× RELATED பெங்களூரு விமான நிலையத்தில்...