×

கோதாவரி எப்ளு ஃபியோ

சட்டிஸ்கரைச் சேர்ந்த ஹீரா குழுமத்தின் துணை நிறுவனமான கோதாவரி எலக்ட்ரிக் மோட்டார்ஸ் நிறுவனம் எப்ளு ஃபியோ என்ற புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. ஷோரூம் விலையாக சுமார் ரூ.99,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் 2.52 கிலோ வாட் அவர் பேட்டரி இடம் பெற்றுள்ளது. இதில் உள்ள மோட்டார் அதிகபட்சமாக 110 எம்எம் டார்க்கை வெளிப்படுத்தும்.

இந்த ஸ்கூட்டரை ஒரு முறை சார்ஜ் செய்தால், அதிகபட்சமாக 110 கி.மீ தூரம் வரை செல்லலாம். முழுமையாக சார்ஜ் செய்ய சுமார் 5.25 மணி நேரம் ஆகும். சைடு ஸ்டாண்ட் சென்சார், எல்இடி ஹெட்லாம்ப் மற்றும் டெயில் லாம்ப், 12 அங்குல டியூப்லெஸ் டயர்கள், புளூடூத் இணைப்பு, மொபைல் சார்ஜிங் போர்ட், 7.4 அங்குல டிஜிட்டல் டிஸ்பிளே, சர்வீஸ் அலர்ட் ஆகிய வசதிகள் உள்ளன.

The post கோதாவரி எப்ளு ஃபியோ appeared first on Dinakaran.

Tags : Godavari ,Godavari Electric Motors ,Chhattisgarh ,Heera Group ,Apple Fio ,Dinakaran ,
× RELATED குடிநீர் பிரச்னையே வராதபடி கோதாவரி...