×

வார இறுதி நாட்கள், சுபமுகூர்த்த நாட்களை முன்னிட்டு 400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு!

சென்னை: வார இறுதி நாட்கள், சுபமுகூர்த்த நாட்களை முன்னிட்டு 400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாட்களில் 400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. நாளை சென்னையில் இருந்தும், பிற இடங்களில் இருந்தும் கூடுதல் பயணிகள் தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்வார்கள் என்பதால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. நாளை சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, சேலத்தில் இருந்து முக்கிய இடங்களுக்கும், பெங்களூருவில் இருந்து பிற இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

இந்த வார இறுதியில் பயணம் செய்ய இதுவரை 11,114 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். தொலைதூர பயணம் மேற்கொள்ள விரும்புவோர் www.tnstc.in மற்றும் tnstc official app மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு பேருந்து இயக்கத்தை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

The post வார இறுதி நாட்கள், சுபமுகூர்த்த நாட்களை முன்னிட்டு 400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED எல்லோருக்கும் எல்லாம் என்ற...