×

வளைகுடா நாடுகளில் பினராயி விஜயன் தொழில் நடத்துகிறார்: சொப்னா பேட்டி

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் உள்ள அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டவர் சொப்னா. இவர் அடிக்கடி கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக பல்வேறு புகார்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இந்தநிலையில் தற்போது ஒரு மலையாள தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டி: பினராயி விஜயன் பினாமிகளின் பெயரில் வளைகுடா நாடுகளில் பல தொழில்கள் நடத்துகிறார்.

குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகம், சார்ஜா, அஜ்மான் ஆகிய நாடுகளில் தான் அதிக அளவில் தொழில்கள் நடைபெற்று வருகின்றன. இதனால்தான் அடிக்கடி அவர் வளைகுடா நாடுகளுக்கு பயணம் செய்து வருகிறார். விரைவில் பினராயி விஜயன் தொடர்பான பல அதிரடி தகவல்களை நான் வெளியிடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

 

The post வளைகுடா நாடுகளில் பினராயி விஜயன் தொழில் நடத்துகிறார்: சொப்னா பேட்டி appeared first on Dinakaran.

Tags : Pinarayi Vijayan ,Gulf ,Sobna Petty ,Thiruvananthapuram ,Sobna ,UAE ,Kerala ,
× RELATED காங். தனித்து போட்டியிட்டதே பாஜவின் வெற்றிக்கு காரணம்