×

தி.மலை, சேலம் உள்பட தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை; மக்கள் உற்சாகம்..!!

திருவண்ணாமலை: தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. திருவண்ணாமலை, சேலம், ஈரோடு, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. திருவண்ணாமலை, வேங்கிக்கால், அடிஅண்ணாமலை, ஏந்தல், தண்டராம்பட்டு, கீழ்பெண்ணாத்தூர், வேட்டவலம், செங்கம் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கனமழை பெய்து வருகிறது. சேலம் மாவட்டம் சங்ககிரி, அரசிராமணி, தேவூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கனமழை நீடித்து வருகிறது.

சேலம் மாநகர், ஆத்தூர், நரசிங்கபுரம், தாண்டவராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தருமபுரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. ஈரோடு, ப.செ.பூங்கா, ரயில் நிலையம், பெருந்துறை, சம்பத் நகர், வீரப்பன்சத்திரம், கொல்லம்பாளையம், மூலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, பட்டறைமேடு, கூட்டப்பள்ளி, கொல்லப்பட்டி பகுதிகளில் மிதமான மழை பெய்கிறது. தேனி நகர் மற்றும் அல்லிநகரம், அரண்மணைபுதூர், வீரபாண்டி, ரத்தினம் நகர், அன்னஞ்சி, பொம்மையகவுன்டன்பட்டி, கருவேல்நாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் குன்னூர் சுற்றுவட்டார ஊர்களில் கனமழை பெய்தது.

The post தி.மலை, சேலம் உள்பட தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை; மக்கள் உற்சாகம்..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,D. Malai ,Salem ,Tiruvannamalai ,Erode ,Theni ,Thiruvannamalai, ,
× RELATED தமிழகத்தில் நாளை நடக்க இருந்த...