×

ரக்‌ஷா பந்தன் கொண்டாட்டம் ஆசிரியர் கையில் 7 ஆயிரம் பெண்கள் ராக்கி கயிறு கட்டி அசத்தல்

பீகார்: ஆசிரியர் ஒருவரது கையில் 7 ஆயிரம் பெண்கள் ராக்கி கயிறு கட்டி அசத்தியுள்ளனர். சகோதர, சகோதரிகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்தும் நோக்கில் கொண்டாடப்படும் பண்டிகை ரக்ஷாபந்தன். இப்பண்டிகை, இந்தி காலண்டர்படி, ஒவ்வொரு ஆண்டும் ஷ்ரவன் மாதத்தில் (அதாவது ஆகஸ்ட் மாதம்) வரும் முழு நிலவு நாளில் கொண்டாடப்படுகிறது. ராக்கி என்றும் இப்பண்டிகை அழைக்கப்படுகிறது. இந்நாளில், சகோதரிகள் தங்கள் சகோதரர்களின் மணிக்கட்டில் ஒரு புனித கயிறு கட்டுவர். தீயவற்றில் இருந்து சகோதரர்களை காப்பாற்றவும், அவர்களது நல்வாழ்வுக்காகவும், நீண்ட ஆயுளுக்காகவும் சகோதரிகள் பிரார்த்தனை செய்து புனித கயிறு கட்டுவது வழக்கம். இந்த பண்டிகையையொட்டி நேற்று ஆசிரியர் ஒருவருக்கு 7 ஆயிரம் பெண்கள் ராக்கி கயிறு கட்டியுள்ள சம்பவம் உலக சாதனையாக பார்க்கப்படுகிறது.

அதுபற்றிய விவரம்: பீகார் மாநிலம் பாட்னாவில் ஆன்லைன் மூலமாகவும், டியூசன் மூலமாகவும் மாணவர்களுக்கு பாடம் எடுத்து வருபவர் ஆசிரியர் கான். இவர் தனது அர்ப்பணிப்பு மூலம் மாணவர்களுக்கு சிறப்பான முறையில் கல்வி கற்பித்து வருகிறார். இதனால் பாட்னாவில் பிரபலமான திகழ்ந்து வருகிறார். நேற்று ரக்ஷா பந்தன் விழாவை முன்னிட்டு சகோதரிகள் எனது மணிக்கட்டில் ராக்கி கயிறு கட்ட வருமாறு அழைப்பு விடுத்திருந்தார். இதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பெண்கள், மாணவிகள், சிறுமிகள் திரண்டு வந்து கானின் மணிக்கட்டில் ராக்கி கயிறுகளை கட்டினர். இதனால் அவரது கை முழுவதும் ராக்கி கயிறுகளாக காட்சியளித்தன. சுமார் 7 ஆயிரம் பெண்கள் தனது மணிக்கட்டில் ராக்கி கயிறு கட்டியதாக கான் தெரிவித்துள்ளார். மேலும், இது உலக சாதனை என்று தெரிவித்துள்ளார்.

 

The post ரக்‌ஷா பந்தன் கொண்டாட்டம் ஆசிரியர் கையில் 7 ஆயிரம் பெண்கள் ராக்கி கயிறு கட்டி அசத்தல் appeared first on Dinakaran.

Tags : Raksha Bandhan ,Bihar ,
× RELATED 10 ஆண்டுகளுக்கு முன்பு மோடி பேசிய...