×

பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தில் இளநிலை ஆராய்ச்சியாளர்

கர்நாடகா, பெங்களூரிலுள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தில் இளநிலை ஆராய்ச்சியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி:
1. Junior Research Fellow: (Chemical Engineering) 2 இடங்கள். சம்பளம்: ரூ.31,000. வயது: 28க்குள். தகுதி: கெமிக்கல் இன்ஜினியரிங் பாடத்தில் முதல் வகுப்பில் பி.இ.,/பி.டெக்., பட்டம் பெற்று, கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது முதல் வகுப்பு எம்.இ.,/எம்.டெக் அல்லது முதல் வகுப்பு எம்எஸ்சி பட்டம் பெற்று நெட் தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
2. Junior Research Fellow: (Mechanical Enginneering): 2 இடங்கள். சம்பளம்: ரூ.31,000. வயது: 28க்குள். தகுதி: மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பாடத்தில் முதல் வகுப்பில் பி.இ.,/பி.டெக்., பட்டம் பெற்று கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது முதல் வகுப்பில் எம்.இ.,/எம்டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தால் நடத்தப்படும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பதாரர்கள் www.drdo.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விவரங்களை பூர்த்தி செய்த பின்னர் hrd.debel.debel@gov.in என்ற மின்னஞ்சலில் அனுப்பவும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.8.2023.

 

The post பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தில் இளநிலை ஆராய்ச்சியாளர் appeared first on Dinakaran.

Tags : Defense Research Development Institute ,Bangalore, Karnataka ,Dinakaran ,
× RELATED விதவிதமான விளக்குகள்