×

நிலவில் குழந்தையை போல சுற்றும் ரோவர்… தாய் பாசத்துடன் பார்க்கும் லேண்டர்: வீடியோ வெளியிட்டு இஸ்ரோ வர்ணிப்பு..!!

ஸ்ரீஹரிகோட்டா: நிலவில் சந்திரயான்-3 விண்கலத்தின் ரோவர் பாதுகாப்பாக உலா வரும் வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் லட்சிய விண்வெளி பணியான சந்திரயான்-3 ஆகஸ்ட் 23 அன்று நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. பிரக்யான் ரோவர் விக்ரம் லேண்டரில் இருந்து வெளியே வந்து சந்திர மேற்பரப்பில் கால் வைத்தது.

அதன்பின் மெல்ல மெல்ல ஊர்ந்து நிலவின் மேற்பரப்பில் ஆய்வு செய்து வருகிறது. ஒரு பெரிய பள்ளத்தை கண்டறிந்து தனது பாதையை மாற்றியது. நேற்று சல்பைடு தாது இருப்பதாக கண்டறிந்தது. இந்நிலையில், நிலவில் சந்திரயான்-3 விண்கலத்தின் ரோவர் பாதுகாப்பாக உலா வரும் வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. ரோவர் வாகனம் நின்று கொண்டிருந்த இடத்தில் இருந்தே வலப்புறமாக சுழல்வதை லேண்டர் படம் பிடித்து அனுப்பியது.

லேண்டர் அனுப்பியுள்ள புதிய வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. பாதுகாப்பான பாதையை தேர்ந்தெடுப்பதற்காக ரோவர் நின்ற இடத்தில் சுற்றுமுற்றும் சுழன்று பார்க்கும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. பிரக்யான் ரோவரை லேண்டர் குழந்தையைப் போல் கண்காணித்து வருவதாக இஸ்ரோ கூறியுள்ளது. சந்தா மாமாவின் முற்றத்தில் ஒரு குழந்தை விளையாடுவதை தள்ளி நின்று தாய் பார்ப்பது போல லேண்டர், நிலவில் உற்சாகமாக சுற்றும் ரோவரை பாசத்துடன் பார்ப்பதாக இஸ்ரோ வர்ணித்துள்ளது.

The post நிலவில் குழந்தையை போல சுற்றும் ரோவர்… தாய் பாசத்துடன் பார்க்கும் லேண்டர்: வீடியோ வெளியிட்டு இஸ்ரோ வர்ணிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : ISRO ,Srihrikota ,Moon ,Indian Space Research Centre ,
× RELATED நிலவின் தென்துருவப் பகுதியில்...