×

டி.என்.பி.எஸ்.சி. தலைவராக சைலேந்திர பாபுவை நியமிப்பது தொடர்பாக ஆளுநர் எழுப்பிய கேள்விகளுக்கு தமிழ்நாடு அரசு விளக்கம்..!!

சென்னை: டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திர பாபுவை நியமிப்பது தொடர்பாக ஆளுநர் எழுப்பிய கேள்விகளுக்கு தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. தமிழ்நாட்டின் அரசுத் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களை டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நியமினம் செய்து வருகிறது. ஆண்டுதோறும் தேர்வுகள் நடத்தப்பட்டு, ஆட்களைத் தேர்வு செய்வது டிஎன்பிஎஸ்சியின் முக்கியப் பணியாகும். டிஎன்பிஎஸ்சி அமைப்பில் தலைவர் மற்றும் 10 உறுப்பினர் பதவிகள் பல மாதங்களாக காலியாக இருந்து வருகின்றன.

இந்நிலையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவராக ஓய்வுபெற்ற டிஜிபி சைலேந்திரபாபுவை நியமிக்க அரசு முடிவு செய்தது. பின்னர், தமிழக அரசு டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்கு சைலேந்திரபாபுவும், 10 உறுப்பினர்கள் பதவிகளுக்கான பெயர்களையும் பரிந்துரை செய்து ஆளுநருக்கு பரிந்துரை பட்டியலை அனுப்பியது. சைலேந்திரபாபு நியமனத்துக்காக அரசு அனுப்பிய கோப்புகளை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் நியமனத்துக்கான நடைமுறைகள் குறித்து ஆளுநர் விளக்கம் கேட்டிருந்தார். இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமன நடைமுறைகளை விளக்கி சைலேந்திரபாபு பெயரை அரசு மீண்டும் பரிந்துரைத்துள்ளது.

The post டி.என்.பி.எஸ்.சி. தலைவராக சைலேந்திர பாபுவை நியமிப்பது தொடர்பாக ஆளுநர் எழுப்பிய கேள்விகளுக்கு தமிழ்நாடு அரசு விளக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : TD ,GP ,Sylendra Babu ,Tamil Nadu ,Govt ,Chennai ,Tamil Nadu Government ,DNBSC ,D. N.N. ,Tamil Nadu Govt ,Dinakaran ,
× RELATED ஜெய், யோகி பாபு இணையும் பேபி அன்ட் பேபி