×

ஈரோடு மாவட்டம் கோபி அருகே சூறாவளி காற்றால் 10,000 வாழை மரங்கள் சேதம்: விவசாயிகளுக்கு ரூ.70 லட்சம் இழப்பு

ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபி அருகே அந்தியூர் சுற்றுவட்டாரங்களில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்ததால் அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. ஒரு கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். ஈரோடு மாவட்டம் கோபி அருகே கோரக்காட்டூர், கட்டுகாம்பாளையம், அய்யம்பாளையம், வெள்ளாங்கோயில், குள்ளம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 2000 ஏக்கரில் வாழை சாகுபடி செய்யப்பட்டது.

செவ்வாழை, நேந்திரன், ரஸ்தாலி உள்ளிட்ட வகை வாழைகள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டன. இன்னும் ஒரு மாத காலத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், நேற்று இரவு அந்த பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து வீணாகியுள்ளன. இந்த பகுதிகளில் மட்டும் சுமார் 70 லட்சம் ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டு இருப்பதாக கூறும் விவசாயிகள் சூறாவளி காற்றால் முறிந்து விழுந்த மரங்களை அப்புறப்படுத்தவே ஏக்கருக்கு ரூ.30,000 செலவாகும் என புலம்புகின்றன.

இதேபோல் அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளான எண்ணமங்களம், கொட்டிசத்திரம், சங்கராபாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கனமழை கொட்டியதால் வாழைமரங்கள் அடியோடு சாய்ந்தன. அறுவடைக்கு தயாராக இருந்த அனைத்து வாழைகளும் முறிந்து விழுந்து வீணாகி உள்ளதால் விவசாயிகள் செய்வது அறியாமல் தவித்து வருகின்றனர்.

The post ஈரோடு மாவட்டம் கோபி அருகே சூறாவளி காற்றால் 10,000 வாழை மரங்கள் சேதம்: விவசாயிகளுக்கு ரூ.70 லட்சம் இழப்பு appeared first on Dinakaran.

Tags : Erode district Gobi ,Erode ,Gobi, Erode district ,
× RELATED ஈரோடு பெருமுகையில் சிறுத்தை நடமாட்டம்: வனத்துறை எச்சரிக்கை