×

காஞ்சிபுரம் அருகே சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்..!!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் அடுத்த வேடல், சேகான்குளம் பகுதியில் கனரக வாகனம் ஒன்று பழுதாகி நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் 2 மணி நேரத்திற்கும் மேலாக இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக குற்றசாட்டுவைத்தனர்.

இதை தொடர்ந்து சாலையின் இரு புறங்களிலும் சென்னையிலிருந்து பெங்களூரு செல்லக்கூடிய வாகனங்களும் பெங்களூரிலிருந்து சென்னையை நோக்கி வரும் வாகனங்களும் அணிவகுத்து நின்றன. மேலும் பாதிப்பை சரி செய்யும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வாகனங்களை ஒழுங்கு படுத்தும் முறையிலும் ஈடுபட்டனர். பின்னர் பழுதாகி நின்ற கனரக வாகனம் அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரதானது சிறிது குறையத் தொடங்கியது. மேலும் 5 கிலோ மீட்டருக்கு மேல் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

The post காஞ்சிபுரம் அருகே சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Bengaluru National Highway ,Kanchipuram ,Chennai Bengaluru National Highway ,Vedal ,Sekankulam ,
× RELATED ஓசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில்...