×

சிவப்பு நிறமாக மாறிய ஸ்பெயின் நகரம்: 120 டன் தக்காளியை ஒருவர் மீது ஒருவர் அடித்துக்கொள்ளும் வினோத திருவிழா

மாட்ரிட்: ஸ்பெயின் புனோல் நகரத்தில் தக்காளி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. ஒரு டிராக்கர் முழுவதும் கொண்டுவரப்பட்ட தக்காளிகளை ஒருவர் மீது மற்றவர்கள் வீசி உற்சாகமாக திருவிழாவை கொண்டாடினர். ஸ்பெயினின் கிழக்கு நகரமான புனோலில் ஆண்டுதோறும் டொமடினா என்கிற தக்காளி திருவிழா நடைபெறுகிறது. அதாவது, ஒருவர் மீது ஒருவர் பழுத்த தக்காளிகளை தூக்கி எறிந்து விளையாடும் திருவிழாதான் அது. இதற்காக சுமார் 120 டன் தக்காளி பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்த திருவிழாவில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் உட்பட சுமார் 15,000 பேர் தக்காளியுடன் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர். தக்காளி திருவிழாவால் தெருக்கள், வீடுகள் மற்றும் பங்கேற்பாளர்கள் என அனைவரும் தக்காளியில் நனைந்தனர். இதனால் அப்பகுதி முழுவதும் சிவப்பு நிறுத்தில் காட்சியளித்தது. இந்த திருவிழாவிற்கான டிக்கெட்டுகள் 12 யூரோக்களில் தொடங்குகிறது. இந்தியாவில் சமீப நாட்கள் வரை தக்காளியின் விலை அதிகரித்து காணும் நிலையில், ஸ்பெயினில் தக்காளியை வீண் அடிப்பதற்காகவே ஒரு வினோத திருவிழா நடத்துவது நமக்கு ஆச்சரியமான விஷயம்தான்.

The post சிவப்பு நிறமாக மாறிய ஸ்பெயின் நகரம்: 120 டன் தக்காளியை ஒருவர் மீது ஒருவர் அடித்துக்கொள்ளும் வினோத திருவிழா appeared first on Dinakaran.

Tags : Madrid ,Puñol, Spain ,
× RELATED மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: 3வது சுற்றில் கார்சியா