×

காலை உணவு திட்டம் குறித்து விமர்சனம்.. தினமனு-வுக்கு எனது வன்மையான கண்டனங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை : தினமனு-வுக்கு வன்மையான கண்டனங்களை தெரிவிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்தி வெளியிட்டுள்ளார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் குறித்து விமர்சித்த நாளிதழுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள பதிவில்,”உழைக்க ஓர் இனம் – உண்டு கொழுக்க ஓர் இனம் என மனுவாதிகள் கோலோச்சிய காலத்தில் ‘எல்லார்க்கும் எல்லாம்’ எனச் சமூகநீதி காக்க உருவானதுதான் திராவிடப் பேரியக்கம்.

‘சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியை மட்டும் கொடுத்து விடாதே’ என்பதை நொறுக்கி, கல்விப்புரட்சியை உருவாக்கிய ஆட்சி திராவிட இயக்க ஆட்சி.

நிலவுக்குச் சந்திரயான் விடும் இந்தக் காலத்திலேயே சனாதனம் இப்படியொரு தலைப்புச் செய்தியைப் போடுமானால், நூறு ஆண்டுகளுக்கு முன் என்ன ஆட்டம் ஆடியிருக்கும்? எளியோர் நிலை எப்படி இருந்திருக்கும்? இன்னமும் அந்த வன்மம் மறையவேயில்லை!

தினமனு-வுக்கு எனது வன்மையான கண்டனங்கள்!,”இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post காலை உணவு திட்டம் குறித்து விமர்சனம்.. தினமனு-வுக்கு எனது வன்மையான கண்டனங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : G.K. Stalin ,Chennai ,Tamil Nadu ,Chief of ,President ,Muhammadu ,CM BC ,
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...