×

பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு!: தமிழ்நாட்டில் ஆவின் பால் விற்பனை ஆகஸ்டில் 7% அதிகரிப்பு..!!

சென்னை: தமிழ்நாட்டில் ஆவின் பால் விற்பனை ஆகஸ்டில் 7% அதிகரித்துள்ளது. தமிழக அரசு ஆவின் மூலம் பால் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. தற்போது தினமும் சுமார் 30 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்து வருகிறது. தனியாரை விட குறைந்த விலையில் பால் கிடைப்பதால் பொதுமக்கள் இடையே ஆவின் பாலுக்கு எப்போதும் வரவேற்பு உள்ளது. நீல நிறம், பிங்க் நிறம், பச்சை நிறம், ஆரஞ்சு நிறம் என்று 4 வகையான பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் ஆவின் பால் விற்பனை ஆகஸ்டில் 7% அதிகரித்துள்ளது. சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் ஆவின் பால் விற்பனை அதிகரித்துள்ளதாக நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

ஆவின் பால் விற்பனை அதிகரித்துள்ள நிலையில் பால் கொள்முதல் குறைந்துள்ளது. 2022 ஆகஸ்டில் சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் 14.96 லட்சம் லிட்டர் பால் விற்ற நிலையில் இவ்வாண்டு ஆகஸ்டில் 16.1 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டுள்ளது. நிர்வாக சீர்திருத்தத்துக்கு பிறகு ஆவின் பால் விற்பனை அதிகரித்துள்ளது. ஆவின் பால் விநியோக தாமதம், தரம் உள்ளிட்டவற்றில் கொண்டுவரப்பட்ட சீர்திருத்தத்துக்கு பிறகு ஆவின் பால் விற்பனை அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஆவின் பால் உப பொருள்களின் விலை ஒரே சீராக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், ஆவின் நிறுவன அதிகாரிகளுக்கு நேற்று அறிவுறுத்தினார் என்பது நினைவுகூரத்தக்கது.

The post பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு!: தமிழ்நாட்டில் ஆவின் பால் விற்பனை ஆகஸ்டில் 7% அதிகரிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Among Public ,Tamil Nadu ,Chennai ,Awin ,Government of Tamil Nadu ,
× RELATED வாட்டி வதைக்கும் கோடை வெப்பம்; சரும...