சென்னை : சென்னை மெட்ரோ ரயில் சேவையுடன் புறநகர் பறக்கும் ரயில் சேவை விரைவில் இணைக்கப்பட உள்ளது. சென்னை மாநகரப் பகுதிகளில் கடற்கரை முதல் வேளச்சேரி வரை பறக்கும் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.இந்த பறக்கும் ரயில் சேவையை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம், சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் ஆய்வு செய்து மெட்ரோ ரயில் சேவையுடன் இணைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக முதற்கட்ட ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், மெட்ரோ ரயில் – பறக்கும் ரயில் சேவை இணைப்புக்கான வரைவு புரிந்துணர்வு ஒப்பந்தம் ரயில்வே வாரியத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னை புறநகர் பறக்கும் ரயில் நிலையங்களை மறு சீரமைப்பு செய்து மெட்ரோ ரயில் சேவைக்கு இணையான சேவையை வழங்க சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் நடவடிக்கை எடுக்க உள்ளது. அதன்படி, மந்தைவெளி, கிரீன்வேஸ் சாலை, கோட்டூர்புரம், கஸ்தூரிபா நகர் ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன.அதே போல் இந்திரா நகர், திருவான்மியூர், தரமணி , பெருங்குடி, வேளச்சேரி உள்ளிட்ட ரயில் நிலையங்களும் மேம்படுத்த சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் முடிவு எடுத்துள்ளது. மேலும் சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழும அதிகாரிகள் டெண்டர் விட்டு பறக்கும் ரயில் சேவையை மேம்படுத்தும் பணிகளை மேற்கொள்ளவுள்ளனர்.
The post சென்னை மெட்ரோ ரயில் சேவையுடன் புறநகர் பறக்கும் ரயில் சேவை விரைவில் இணைப்பு!! appeared first on Dinakaran.