
- தேவதானப்பட்டி
- தேவதானபட்டி
- திருவில்லிபுத்தூர் கலசலிங்கம் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை கல்லூரி
- பெரியகுளம்
தேவதானப்பட்டி, ஆக. 31: திருவில்லிபுத்தூர் கலசலிங்கம் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைகல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் கிராம தங்கள் திட்டத்தின் கீழ் பெரியகுளம் பகுதியில் தங்கி உள்ளனர். இந்த மாணவர்கள் விவசாயிகளின் விளைநிலங்களுக்கு நேரடியாக சென்று, அவர்களின் அனுபவம் மற்றும் தற்போது விவசாயத்தில் புதிய தொழில்நுட்பங்களின் பங்கு ஆகியவற்றை பகிர்ந்து வருகின்றனர். மேலும் விவசாயிகளுக்கு தேவையான சாகுபடி பயிர்களின் நோய் தடுப்பு முறை ஆலோசனைகள், வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் திட்டங்கள் குறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தேவதானப்பட்டி பகுதியில் விவசாயிகளின் விளைநிலங்களுக்கு சென்று மா சாகுபடியில் மதிப்பு கூட்டுதல் குறித்து செயல் விளக்கம் அளித்தனர். மா சாகுபடியில் மதிப்பு கூட்டுப்பொருட்கள், பழக்கூழ், பழரசம், மிட்டாய்கள், ஜாம், ஜெல்லி ஆகிய பொருட்கள் தயாரிப்பால் விவசாயிகளுக்கு கிடைக்கக்கூடிய அதிக லாபம், மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கி கூறினர். இந்த செயல்விளக்கத்தை மாணவர்கள் அருண்பாரதி, ஆசிஷ்குமார், லிங்கேஸ்வரன், தேவா, மகிழ்அமுதன் ஆகியோர் நடத்தினர்.
The post தேவதானப்பட்டி பகுதியில் மா சாகுபடியில் மதிப்புக்கூட்டு செயல்விளக்கம் appeared first on Dinakaran.